இன்று உங்களுக்கான நாள் எப்படி..?? இன்றைய ராசி பலன்கள்: 20/10/2020

நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 04 ஆம் நாள், செவ்வாய் கிழமை (20/10/2020)

விரதம்: சதுர்த்தி

திதி: சதுர்த்தி மாலை 05:04 வரை பின்பு பஞ்சமி

நட்சத்திரம்: அனுஷம் காலை 09:40 வரை பின்பு கேட்டை

சந்திராஷ்டமம்: பரணி

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

நல்ல நேரம்:
காலை: 07:45 – 08:45
மாலை: 04:45 – 05:45

தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 03:00 – 04:30 PM
குளிகை: 12:00 – 01:30 PM
எமகண்டம்: 09:00 – 10:30 AM

வழிபாடு: விநாயகரை வழிபட வினைகள் தீரும்

ராசி பலன்கள்:

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் அலைச்சல்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானம் வேண்டும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே மன ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை தோன்றும். உயர் அதிகாரிகளின் ஆதரவினால் நல்ல பலன் கிடைக்கும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் பணிச்சுமைகள் குறையும். பொருட்களை வாங்க ஆர்வம் காண்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப செய்திகள் வந்து சேரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே! வியாபார முதலீடுகளில் நிதானம் வேண்டும். பொருளாதார நிலையில் ஏற்றம் இறக்கம் உண்டாகும். சுபகாரிய செயல்களில் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் நிலவும். முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். பயணங்களின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! பேச்சு சாதுரியத்தின் மூலம் பாராட்டுகள் பெறுவீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் ஒற்றுமை மேம்படும். மனதில் சிலவித குழப்பங்கள் தோன்றும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! பணிகளில் மந்தம் ஏற்படும். திருத்தலங்களுக்கு செல்வீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் வேண்டும். கொடுக்கல்-வாங்கல் செயல்களில் சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வீர்கள். நண்பர்களின் மூலம் லாபம் கிடைக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டாகும். சுப காரியங்களில் இருந்து வந்த கால தாமதம் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! பெரியவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே! குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் நிலவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு தோன்றும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

Exit mobile version