இந்த ராசிக்கு திருமண வரன் கைகூடும்! இன்றைய ராசி பலன்கள்: 25/10/2020

நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 09 ஆம் நாள், ஞாயிறு கிழமை (25/10/2020)

விரதம்: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
தசமி பிற்பகல் 12:11 முதல் நாளை பிற்பகல் 12:36 வரை

திதி: நவமி பிற்பகல் 12:10 வரை பின்பு தசமி

நட்சத்திரம்: திருவோணம் காலை 07:36 வரை பின்பு அவிட்டம்

சந்திராஷ்டமம்: புனர்பூசம்

யோகம்: அமிர்தயோகம் காலை 07:36 வரை பின்பு மரணயோகம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

நல்ல நேரம்:
காலை: 07:45 – 08:45
மாலை: 03:15 – 04:15

தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 04:30 – 06:00 PM
குளிகை: 03:00 – 04:30 PM
எமகண்டம்: 12:00 – 01:30 PM

வழிபாடு: சரஸ்வதியை வழிபட நன்மை உண்டாகும்

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்:
காலை 06:00 மணி முதல் 10:00 மணி வரை
பிற்பகல் 02:00 மணி முதல் 04:30 மணி வரை

ராசி பலன்கள்:

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இலக்கை அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும். உதவிகள் செய்யும் போது கவனம் வேண்டும். நிலுவையிலிருந்த பணிகள் சிறப்பாக முடியும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறந்தது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியிடங்களில் மென்மையான வாய்ப்பு உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவு மேம்படும். தங்கம் வாங்க சிறந்த நாள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! கடன் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கவனம் வேண்டும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே! பணியிடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தாயின் உடல்நிலை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பணியிடங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழல் நிலவும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது நிதானம் வேண்டும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுயதொழில் வாய்ப்பு உண்டாகும். நிலுவையிலிருந்த காரியங்களில் சிறப்பாக முடியும். பூர்வீக சொத்துக்களில் மூலம் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் திறமைகளை வெளிக்காட்டும் அதற்கு உகந்த நாள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! எதிர்பாராத சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. வியாபாரத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களே! கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்த உகந்த நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் தோன்றும். யாத்திரைகள் மேற்கொள்ள சிறந்த நாள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் வாங்க ஆர்வம் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பேச்சு சாதுரியத்தின் மூலம் பாராட்டுகள் பெறுவீர்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே! மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். திருமண வரன் கைகூடும். செல்வாக்கு அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். சுப செய்திகள் வந்து சேரும்.

Exit mobile version