இன்றைய ராசி பலன்கள்: (29/10/2020)..! உங்கள் ராசிக்கு..??

நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 13 ஆம் நாள், வியாழன் கிழமை (29/10/2020)

திதி: திரயோதசி மாலை 04:43 வரை பின்பு சதுர்த்தி

நட்சத்திரம்: உத்திரட்டாதி பிற்பகல் 02:09 வரை பின்பு ரேவதி

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

யோகம்: சித்தயோகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

நல்ல நேரம்:
காலை: 10:45 – 11:45
மாலை: 12:15 – 01:15

தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 01:30 – 03:00 PM
குளிகை: 09:00 – 10:30 AM
எமகண்டம்: 06:00 – 07:30 AM

வழிபாடு: குருபகவானை வழிபட சுபம் உண்டாகும்

ராசி பலன்கள்:

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.
வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். மனதில் குழப்பமான சூழ்நிலை தோன்றும். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். பொறுமையுடன் இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! பூர்வீக சொத்துக்களின் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். செய்யும் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படலாம். தாயின் ஆதரவு கிடைக்கும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே! உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் நிதானம் வேண்டும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு உகந்த நாள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டாகும். வாகன பயணங்களின்போது கவனம் வேண்டும். பணியிடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! பழைய கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும். ஊதிய உயர்வு கிடைக்கும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனச் செலவுகள் ஏற்படலாம்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! உங்களில் மதிப்பும் மரியாதையும் உயரும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களே! எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களின் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். சுப செய்திகள் வந்து சேரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வாகன செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்பீர்கள். உதவிகள் செய்யும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே! மனவருத்தங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் தோன்றும்.

Exit mobile version