திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின்

Nanguneri-Vikravandi-seats-Stalin-campaign-8-days

Nanguneri-Vikravandi-seats-Stalin-campaign-8-days

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின்

விழுப்புரம்

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கமூர் ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் கலந்துரையாடினார் அப்போது, அம்மக்களிடையே ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின்

“சீனாவின் பிரதமர் மாமல்லபுரத்திற்கு வந்தார். பிரதமர் மோடியும் அவரை அழைத்துச் சென்று மாமல்லபுரத்தைச் சுற்றிக் காண்பித்திருக்கிறார்.அந்த மாமல்லபுரம், சிங்கப்பூரை மிஞ்சும் அளவுக்கு ஒருவார காலத்திற்குள் சுத்தம் செய்து அழகுபடுத்தி இருக்கிறார்கள். வெளிநாட்டு அதிபர் வரும்போது சுத்தம் செய்கிறார்கள்.

ஆனால், மக்கள் பிரச்சினைகளை நிறைவேற்றவில்லை. அதற்கு, உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தியிருக்க வேண்டும். கடந்த 8 வருடமாக உள்ளாட்சித் தேர்தலையே இந்த ஆட்சி நடத்தவில்லை. ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெற்றுவிடும். அதிமுக் தோற்றுவிடும் என்று, நடத்தாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Exit mobile version