நடிகர் விக்ரமுடன் தனியறையில் தங்கிய ஜோதிகா? சண்டை போட்ட சூர்யா: வைரலாகும் தகவல்! நடந்தது என்ன?

நடிகர் விக்ரமுடன் தனியறையில் தங்கிய ஜோதிகா? சண்டை போட்ட சூர்யா: வைரலாகும் தகவல்! நடந்தது என்ன?

சமீபத்தில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயிலை எடுத்துக்காட்டாக கூறி கோயிலுக்கு செலவிடுவது போல அதே அளவு பணத்தை பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை பராமரிப்பதற்கு பயன்படுத்தலாம் என பேசினார். இவருடைய இந்த பேச்சுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.அரசியல் தலைவர்கள் பலருடைய எதிர்ப்பையும் சம்பாதித்தது, மேலும் பொது வெளியில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பேசியது நல்ல விஷயம் தான். ஆனால், தஞ்சை பெரிய கோயிலை சுட்டிக்காட்டி பேசியிருக்க கூடாது என்று ஒரு தப்பினர் கருத்து தெரிவித்தனர். மற்றொரு தரப்பினரோ, ஜோதிகா பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

சமீப காலமாக திரைத்துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள் கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் அரசியல் அல்லது மதம் சார்ந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து விட்டு பிறகு பொது மக்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் யாருடைய மனதை குளிர்விக்க இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நடிகை ஜோதிகா கூறிய அதே விஷயத்தை அவர் சம்பந்தப்பட்ட துறையான சினிமாவுடன் தொடர்புபடுத்தி ஆயிரம் கணக்கில் செலவு செய்து நாங்கள் நடிக்கும் படத்தை பார்த்து எங்களை போன்ற நடிகர் நடிகைகளை வாழ வைக்கிறீர்கள். அதே போல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டவும் அதை முறையாக பராமரிக்கவும் காசு கொடுங்கள் என்று கூறியிருந்தால் யாரும் விமர்சிக்கபோவதில்லை. ஆனால், ஜோதிகா பேசியது, குறிப்பிட்ட வகையில் இந்து மதம் சார்ந்த அவர்களின் நம்பிக்கையில் குற்றம் சொல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பேசப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை.

இதனை யார் வேண்டுமானலும் இல்லை என்று மறுக்கலாம். ஆனால், அப்படி மறுப்பவர்கள் அனைவரும் திராவிட அல்லது பெரியார் கொள்கை பின்பற்றும் நபர்களாக அல்லது சாதி ஒழிப்பு பேசும் நபர்களாக மட்டுமே இருக்க முடியும். இதைபோன்ற கருத்துக்களை பல்வேறு அரசியல் தலைவர்களும் கூறியுள்ளார்கள். ஆனால், அவர்கள் யாரும் இப்படி குறிப்பாக இந்த கோயில் என்று குறிப்பிட்டு கூறியது கிடையாது. ஆனால், ஜோதிகா அவர்கள் வெளிப்படையாக தஞ்சை பெரிய கோயில் குறித்து பேசியது அவருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை கிளப்பியது.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இஸ்லாமிய மத கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது அங்கிருப்பவர்களை கவரும் வகையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதங்களை பற்றி பெருமையாக பேசிவிட்டு இந்து மத கோவில்கள் குறித்து அருவருப்பான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் மற்றும் எதிர் கருத்துக்கள் தெரிவிப்பதை தாண்டி , சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை கொச்சைப்படுத்தும் விதமாக சில செய்திகளை அவருடைய எதிர்ப்பாளர்கள் பரப்பி விட்டிருக்கின்றனர்.

அதில் ஒன்று தான், நடிகர் விக்ரம், ஜோதிகா மற்றும்  சூர்யா இடையே நடந்ததாக கூறப்படும் ஒரு விஷயம். சூர்யா மற்றும் ஜோதிகாக்கு திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு நடிகை ஜோதிகா விக்ரமுடன் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் தனியறையில் தங்கியிருந்தாதாகவும் இதனை அறிந்த நடிகர் சூர்யா விக்ரமுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு ஜோதிகாவை அழைத்து வந்ததாகவும் சில தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் அவருடைய எதிர்ப்பாளர்கள் சிலர் பரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த செய்தி வைரலாக பரவி வரும் சூழலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்க்கான எந்த ஆதாரமும் இந்த செய்தியை பரப்பியவர்கள் கொடுக்கவில்லை. தகவல் உண்மையாக இருந்தால் தானே ஆதாரம் கொடுப்பதற்கு என்று ஜோதிகா தரப்பு அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு தனிப்பட்ட நபர் தெரிவித்த கருத்து தவறாக இருக்கும் நிலையில் அதை கருத்து ரீதியில் சந்திப்பதை விடுத்து இப்படி போலியான தகவல்களை பரப்பி அவர்களின் பெயரை கெடுப்பதை தனி மனித தாக்குதலாக தான் பார்க்க முடியும். இவ்வாறு அடிப்படை ஆதாரம் அற்ற இது போன்ற செய்திகளை பரப்புவது மிகவும் தவறானது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version