டியூசனுக்கு வரும் பெண்களை வைத்து விபச்சாரம்.. சென்னையில் லேடி டீச்சர் செய்த அசிங்கம்

Lady Tution Teacher Prostitution in Chennai-Latest Online Crime Live Tamil News Today

Lady Tution Teacher Prostitution in Chennai-Latest Online Crime Live Tamil News Today

டியூசனுக்கு வரும் பெண்களை வைத்து விபச்சாரம்.. சென்னையில் லேடி டீச்சர் செய்த அசிங்கம்

சமீப காலமாக இந்தியா முழுவதும் கள்ளத் தொடர்பு விபச்சாரம் போன்றவை பெருகி வருகிறது. என்னதான் சட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும் இவற்றை கட்டுப்படுத்த இன்னும் இந்திய அரசால் முடியவில்லை. காரணம் ஏழைப் பெண்களின் வாழ்வு முறை, பொருளாதார சூழ்நிலை காரணமாக விபச்சாரத்திற்கு பெருமளவு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை தியாகராய நகர் பகுதியில் டியூசன் படிக்க வரும் மாணவிகளை ஆசிரியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சனா(28) என்ற பெண் தியாகராய நகரில் வசித்தபடி மாலை நேரங்களில் பள்ளி மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி ஒருவர் மாலையில் டியுஷன் முடித்த பிறகு சோர்ந்தவாறு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனைக் கண்ட பெற்றோர் ஏன் என காரணம் கேட்டபோது வெளிவந்தது தான் திடுக்கிடும் ஹைடெக் விபச்சாரம். அதாவது அந்த மாணவியை நிர்வாணப்படுத்தி, அங்கங்களை புகைப்படங்கள் எடுத்து அதனைக் காட்டி மற்றொரு நபருடன் உடலுறவில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் உடனடியாக மாம்பலம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்தப் பெண்ணிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து பார்த்த போது இதே போல் பத்துக்கும் மேற்பட்ட பெண்களையும், பள்ளி மாணவிகளையும் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விபச்சாரத்திற்காகவே வீட்டினுள் பிரத்யேகமாக தனிஅறை ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதும் இதன் மூலமாக தெரியவந்தது.

சஞ்சனாவின் தோழர் பாலாஜி என்பவரும் இந்த விபச்சாரத்தில் ஈடுபட்டதால் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தியாகராய நகர் பகுதியை சேர்ந்த பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version