ஆடைகள் இல்லாமல் படுத்துக் கொண்ட சபரிமலை ரஹானா! மகனை வைத்து செய்த அசிங்கம்! சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ

Rehana Fathima Viral Video-Live Tamil News Today

Rehana Fathima Viral Video-Live Tamil News Today

டெல்லி உயர்நீதிமன்றம் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய நேரத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சாமி தரிசனம் செய்ய சென்றவர்களில் ஒருவர் தான் ரஹானா பாத்திமா. ஆனால் அங்கு அவருக்கு எதிராக நிலவிய பக்தர்களின் கடும் போராட்டத்தால் அவர் சாமி தரிசனம் செய்யாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

அடிப்படையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரான இவர் சம்பந்தேமேயில்லாமல் இந்து கடவுளான சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முயற்சித்த இந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இவர் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்படும் நபராக மாறினார். இதனையடுத்து அவர் ஏதேனும் பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் அது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி விடும் அளவிற்கு சர்ச்சைக்குரிய நபராக திகழ்ந்து வருகிறார். இவ்வாறு எப்பொழுதும் சர்ச்சைகளுக்கு இடையே வாழ்ந்து வரும் ரஹானா பாத்திமா தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

அதாவது அவர் தற்போது வெளியிட்டுள்ள அந்த ஃபேஸ்புக் பதிவில் வீடியோ ஒன்றை இணைத்து பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கட்டிலில் ரஹானா அரை நிர்வாணத்தில் படுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் அவரது உடலில் அவருடைய சிறுவயது மகன் மற்றும் மகள் ஆகியோர் இணைந்து ஓவியம் வரைகின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்ட அந்த வீடியோவிற்கு பாடி அண்ட் பாலிடிக்ஸ் என்று ரஹானா தலைப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த பதிவிற்கு கேப்ஷனாக, அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள் ஒரு பொழுதும் பெண்களின் உடலை அவமதிக்க மாட்டார்கள் என்றும், பெண்களின் உடல்களை பற்றிய விழிப்புணர்வை கொடுக்க குழந்தைகளுக்கு தங்களுடைய வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றும் பாத்திமா கூறியிருக்கிறார்.

இதனையடுத்து சர்ச்சைக்குரிய இந்த வீடியோ பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலாக பரவ ஆரம்பித்தது. மேலும் இதனை பார்த்த ஒவ்வொருவரும் தங்களுடைய எதிர்ப்பை பாத்திமாவுக்கு எதிராக தெரிவித்த வண்ணமேயுள்ளனர். மேலும் அந்த வீடியோவை பார்த்த ஒரு சிலர் சிறு வயதில் அந்த குழந்தைகள் என்ன செய்கிறார் என்பதைக் கூட அறிந்து கொள்ளாத நிலையில் அவருடைய குழந்தைகளை இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுத்தியது மாபெரும் குற்றம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.‌ இதனைத் தொடர்ந்து பாத்திமா வெளியிட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய இந்த சூழ்நிலையில் அவர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராத வகையில் திருவல்லா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Exit mobile version