ரவுடி பேபியின் செயலை பாராட்டிய சமந்தா..!!

நடிகை சாய் பல்லவி ஷூட்டிங் சென்ற இடத்தில் அங்குள்ள கிராமத்து குழந்தைகளுக்கு மெகந்தி வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக ஓடிய பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதை கொள்ளையடித்தார். அதன் பின் கலி, ஃபிதா, கரு, மாரி 2 போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சாய் பல்லவி நடித்துக் கொண்டிருக்கும் லவ் ஸ்டோரி படப்பிடிப்பிற்காக உத்தரப்பிரதேசம் சென்றுள்ளார். அவர் ஷூட்டிங் இடைவேளையில் அங்குள்ள கிராமத்துக் குழந்தைகளின் கைகளில் மெஹந்தி வைத்து அழகு பார்த்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் என்று பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CGrOnNQFC-s/?igshid=m6pf8wzdzso3

கிராமத்துக் குழந்தைகளின் கைகளில் மெஹந்தி வைத்த சாய் பல்லவியின் செயலை நடிகை சமந்தாவும், அனுபமா பரமேஸ்வரனும் பாராட்டியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Exit mobile version