நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையா? உங்களுக்கான வைத்தியம்

Santhana lakshmi viratham for Child

Santhana lakshmi viratham for Child

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்து வரும் நபர்கள் மகாலட்சுமிக்கு உகந்த நாளான வரலட்சுமி விரத நாளில் சந்தான லட்சுமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

மகாலட்சுமிக்கு உகந்த நாளான வரலட்சுமி விரத நாளில் குழந்தை இல்லாதவர்கள் கையில் குழந்தையைத் தாங்கியிருக்கும் சந்தான லட்சுமியை விரதம் இருந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வசதி படைத்தவர்கள் சந்தான லட்சுமி மூல மந்திரத்தை கூறி அக்னி வழிபாடும் செய்யலாம். 108 தடவை ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் சந்தான லட்சுமியே நம என்ற மத்திரத்தை கூறிவிட்டு விட்டு வணங்கவும். இதுமட்டுமில்லாமல் வெறும் சாதத்தில் நெய் மற்றும் பருப்பிட்டு படைத்தபின் காக்கைக்கு ஒரு உருண்டை சாதம் வைத்து காக்கையை பித்ருக்களாக எண்ணி வணங்கவும்.

இதனை செய்து விட்டு அடுத்த மாதவிலக்கு வரும் போது குளித்து விட்ட பின் அடுத்த நாள் காலை குளித்து விட்டு ஒரு மாங்கொத்தை எடுத்துப் பெண் தலையை மும்முறை சுற்றிவிட்டு வீட்டு நடுவாசலில் புதைத்து விடவும். அன்று முதல் அடுத்து வரும் 3 நாட்களுக்குத் தலைக்கு குளித்தபிறகு, அகில் கட்டையை பொடி செய்து பால் சாம்பிராணி தூளுடன் கலந்து, தணலில் சிறிது சிறிதாகப் போட்டு உடலைத் துணியால் மூடிக் கொண்டு ஜலதோஷத்திற்கு வேவு பிடிப்பது போல உடலில் புகையை வாங்கிக் கொள்ளவும்.

இதனால் உடலில் உள்ள துர்நீர் மற்றும் துர்சக்திகள் வெளிவந்து மலட்டுத் தன்மை நீங்கிக் கர்ப்பம் தரித்து அழகான குழந்தை பிறக்கும். இந்த தகவலானது புலிப்பாணி முனிவரின் சித்த ரகசியப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version