நடிகை ஸ்ரேயாவின் வாயில் அவரது கணவர் – இப்படியுமா பண்ணுவீங்க?

Actress Shriya Saran - Latest Cinema News in Tamil

Actress Shriya Saran - Latest Cinema News in Tamil

நடிகை ஸ்ரேயாவின் வாயில் அவரது கணவர் – இப்படியுமா பண்ணுவீங்க?

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் தன்னுடைய கவர்ச்சியின் மூலம் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ஸ்ரேயா சரண்.தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.ஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இசுதாம் என்ற திரைப்படத்தின் மூலமாக தான் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினர்.அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சந்தோசம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபல நடிகையாக மாறினார்.

அதன் பிறகு தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.பின்னர் இந்த புகழின் வாயிலாக பாலிவுட்டிலும்,கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.அந்தவகையில் தமிழ் திரையுலகில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.இளையதளபதி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் அந்த சமயத்தில் டாப் நடிகையாக ஸ்ரேயா சரண் இருந்தார். மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது.

இதனால் திடீரென்று 2018 ஆம் ஆண்டு  தனது நீண்ட நாள் காதலரான டென்னிஸ் வீரர் அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து தன்னுடைய காதல் கணவருடன் வெளிநாட்டில் செட்டிலாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் அவ்வப்போது ஸ்ரேயா சரண் அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது கணவருடன் ரொமான்டிக் ஃபன் செய்த சில வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய கணவர் பின் பக்கமாக நிற்க ஸ்ரேயா சரண் அவரை விழுங்குவது போல் போஸ் கொடுத்துள்ளார்.இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் இப்படியெல்லமா போட்டோ ஷூட் எடுப்பீர்கள் என கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ தொடர்ந்து அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நீங்களும் அப்படிதானே நெனச்சீங்க.. என்று விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.
Exit mobile version