ஆரம்பத்தில் வளர்த்து விட்டவரை கண்டு கொள்ளாமல் கழட்டி விட்டவரா சிவகார்த்திகேயன்

ஆரம்பத்தில் வளர்த்து விட்டவரை கண்டு கொள்ளாமல் கழட்டி விட்டவரா சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவரது எதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக அவர் மாறிவிட்டார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இருப்பதால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆரம்பத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக திகழ்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான மெரினா படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார், ஆனால் அவர் அதற்கு முன்பே ஒரு படத்தில் அறிமுகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சையை கிளப்பி அதன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன்.பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அடிப்படையில் அவர் ஒரு நடிகையும், இயக்குனரும் ஆவார்.

ஆரம்பத்தில் இவரது இயக்கத்தில் என் குறள் 786 எனும் படத்தின் மூலமாக தான் நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுகமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. தொடக்கத்தில் அந்த படத்தின் பணிக்காக லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் சிவகார்த்திகேயன் இரண்டு வருடம் இணைந்து பணியாற்றினாராம். ஆனால் அதன்பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் தனக்கு யார் என்றே தெரியாது என அவர் கூறியதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் மீது புகார் எழுந்தது.

இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு நேரடியாக மோதல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பிரச்சினையை இருவரும் கண்டு கொள்ளாமல் அந்த விஷயத்தில் அமைதி காத்ததால் அந்த பிரச்சனை அப்போது பெரிதாக பேசப்படவில்லை.

தற்போது இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவருக்கு முதலில் வாய்ப்பு தர இருந்த என்னை, யார் என்றே தெரியாது என்று கூறியது தான் தனக்கு வருத்தம் அளிக்கிறது எனவும் சோகத்துடன் கூறியுள்ளார்.இது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தான் வளர்ந்து வந்த பாதையை மறக்காத சிவகார்த்திகேயனா இப்படி செய்தார்? அல்லது லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டுமென்றே இவர் மீது குற்றம் சுமத்துகிறாரா என சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கோபம் கொண்டு லட்சுமி ராமகிருஷ்ணன் மீது கொந்தளித்து வருகின்றனர்.

Exit mobile version