இந்த ராசிக்கு இன்று அதிக லாபம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள்: 09/10/2020

நாள்: சார்வரி வருடம், புரட்டாசி 23 ஆம் நாள், வெள்ளி கிழமை (09/10/2020)

விரதம்: தேய்பிறை அஷ்டமி இன்று பிற்பகல் 01:28 முதல் நாளை பிற்பகல் 01:22 வரை

திதி: சப்தமி பிற்பகல் 01:27 வரை பின்பு அஷ்டமி

நட்சத்திரம்: திருவாதிரை இரவு 09:01 வரை பின்பு புனா்பூசம்

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

யோகம்: சித்தயோகம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

நல்ல நேரம்:
காலை: 09:15 – 10:15
மாலை: 04:45 – 05:45

தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 10:30 AM – 12:00 PM
குளிகை: 07:30 – 09:30 AM
எமகண்டம்: 03:00 – 04:30 PM

வழிபாடு: காலபைரவரை வழிபட கஷ்டங்கள் நீங்கும்

ராசி பலன்கள்:

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக நினைத்த பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். தெரியாதவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு அறிமுகமாகும் புதிய நபர்களால் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த செயல்களை முடிக்க உகந்த நாள். செய்யும் தொழிலில் புதுவிதமான உத்திகளை கையாளும் நாள். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்கள் மூலம் நல்ல மாற்றம் ஏற்படும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வேலை தேடும் முயற்சிகளில் ஈடுபட இன்று நல்ல நாள். சபைகளில் கேட்கும் கேள்விகள் மூலம் பலரின் ஆதரவுகள் கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நல்லது நடக்கும். பணியிடங்களில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்த்து காரியங்கள் நடைபெறும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! இன்று நீங்கள் மேற்கொள்ளும் புண்ணிய யாத்திரைகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் வாக்கு சாதுரியத்தின் மூலம் நற்பெயர் வந்து சேரும். உங்கள் நிர்வாகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! இன்று நீங்கள் வாங்கும் பொருட்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடங்களில் சக ஊழியர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரிப்பதன் மூலம் நல்ல பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கடன் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! இன்று நீங்கள் செல்லும் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய நபர்களிடம் நட்பு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல சூழல் நிலவும். போட்டி, பந்தயங்களில் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். உங்கள் விவாதங்களின் மூலம் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களே! இன்று உங்கள் வாரிசுகளின் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பணியிடங்களில் சக ஊழியர்களின் மூலம் நல்ல சூழல் நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்தது நடக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்கள் பணியில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கல்வி சம்பந்தமான செயல்களில் சாதகமான சூழல் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை காண்பீர்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே! இன்று உங்கள் உடன் பிறப்புகள் இடம் நட்பு காண்பீர்கள். தொழில் புதிய மாற்றங்கள் ஏற்படும். நினைத்த செயலை முடிக்க உகந்த நாள். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல சூழல் நிலவும்.

Exit mobile version